சீனாவில் 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பற்கள்

FuYanCave

இதுவரை காலமும் ஆபிரிக்கா கண்டத்தில் தான் இன்றைய மனிதனின் முதல்குடி வாழ்ந்திருந்ததாக விஞ்ஞானம் கருதி இருந்தது. அதற்கு ஒரே காரணம் அண்மைவரை எடுக்கப்பட்ட மனித எலும்புகளில் காலத்தால் முற்பட்டது ஆபிரிக்கா கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளே. இவை சுமார் 60,000 வருடங்கள் பழமைவாய்ந்தன என்று பரிசோதனைகள் கூறியிருந்தன.
.
அனால் அண்மையில் தெற்கு சீனாவில் உள்ள DaoXian (டஒ சியன்) என்ற நகரில் உள்ள FuYan என்ற குகைகளில் இருந்து எடுக்கபட்ட 47 மனித மூதாதையின் பற்கள் குறைந்தது 80,000 வருடங்கள் பழமைவாய்ந்தன என விஞ்ஞான முறையில் கணிப்பிடப்பட்டுள்ளது. சிலவேளைகளில் இந்த பற்கள் 125,000 வருடங்கள் பழமைவாய்ந்தமையாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் Nature என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளன.
.

கிடைத்துள்ள இந்த 47 பற்களும் சுமார் 13 வெவ்வேறு நபர்களில் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த அகழ்வை Chinese Academy of Sciences செய்துள்ளது. இந்த பற்கள் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குகைகள், நிலக்கீழ் சுரங்க பாதைகளால் இணைக்கப்பட்டு உள்ளன.
.