சீனாவுக்கு எதிராக G7 நாடுகள் $600 பில்லியன் திட்டம்

சீனாவுக்கு எதிராக G7 நாடுகள் $600 பில்லியன் திட்டம்

சீனாவின் Belt and Road திட்டத்தை மேற்கு நாடுகள் ஆரம்பித்தில் புறக்கணித்து இருந்தாலும் சீன திட்டம் உலகில் தமது ஆளுமையை பறிப்பதால் G7 நாடுகள் இன்று ஞாயிறு $600 பில்லியன் திட்டம் ஒன்றை போட்டிக்கு நடைமுறை செய்ய இணங்கி உள்ளன. இத்தொகை வரும் 5 ஆண்டு காலத்தில் செலவிடப்படும்.

ஜெர்மனியின் Schloss Elmau என்ற இடத்தில் கூடிய G7 தலைவர்கள் மத்தியிலேயே இந்த அறிவிப்பை அமெரிக்க சனாதிபதி பைடென் செய்யதுள்ளார். Partnership for Global Infrastructure and Investment (PGII) என்ற பெயர் கொண்ட திட்டத்துக்கு அமெரிக்கா $200 பில்லியன் வழங்கும். ஏனைய நாடுகள் மிகுதி பணத்தை வழங்கும்.

இத்தொகை இலவசமாக வழங்கப்படும் பணம் அல்ல. சீனா செய்வதுபோல் முதலீடுகளுக்கு மட்டுமே இப்பணம் வழங்கப்படும். இதன் ஒரு அங்கமாக அங்கோலாவில் (Angola) $2 பில்லியன் செலவில் சூரிய சக்தி மூலம் மின் பிறப்பிக்கும் நிலையம் ஒன்று கட்டப்படவுள்ளது.

சீனா தனது Belt and Road திட்டத்துக்கு இலங்கை உட்பட சுமார் 100 நாடுகளை உள்வாங்கியுள்ளது. சீன Belt and Road திட்டம் சுமார் $1,200 பில்லியன் முதல் $1,300 பில்லியன் வரையான முதலீடுகளை கொண்டிருக்கும் என்று கூறுகிறது அமெரிக்காவின் Morgan Stanley வங்கி. அதில் $200 பில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டு உள்ளது.

G7 நாடுகள் தமது தேசிய வருமானத்தின் 0.7% பணத்தை வெளிநாடுகளின் அபிவிருத்திக்கு செலவளிக்க உள்ளதாக முன்னர் கூறி இருந்தாலும், உண்மையி இந்த நாடுகள் சுமார் 0.32% பணத்தையே செலவு செய்துள்ளன.