சீனாவை கைவிட இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

சீனாவை கைவிட இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்

சீனாவுடனான பொருளாதார உறவுகளை கைவிடுமாறு அமெரிக்கா இலங்கையை அழுத்துகிறது. அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களத்தின் (state department) தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கு பொறுப்பான அதிகாரி Dean Thompson என்பவர் இலங்கை கடினமான ஆனால் அவசியமான தீர்மானங்களை (“difficult but necessary choices”) எடுத்தல் அவசியம் என்றுள்ளார்.

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் (Secretary of State) மைக் பொம்பேயோ (Mike Pompeo) அடுத்த கிழமை இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளார். இவரின் பயணத்தின் முதன்மை நோக்கம் சீனாவுக்கு எதிராக அணி திரட்டுவதே.

இலங்கையின் கடன் ஏறக்குறைய நாட்டின் GDP அளவுக்கு வளர்ந்துள்ளது. அதனால் இலங்கை அரசின் bonds இந்த ஆண்டு சுமார் 40% ஆல் வீழ்ந்து உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 2021 (USY2029SAG94=TE), 2022 (USY2029SAH77=TE) ஆண்டுகளுக்கான bonds 5% ஆல் வீழ்ந்து உள்ளன.

அமெரிக்காவின் மேற்படி அழுத்தங்களால் விசனம் கொண்ட சீனா அமெரிக்காவை கண்டித்து உள்ளது. அமெரிக்கா மீண்டும் Cold War metality க்கு திரும்புகிறது என்கிறது சீனா.

இந்த ஆண்டு முடிவுக்குள் இலங்கை $3.2 பில்லியன் கடனை அடைதல் அவசியம். அடுத்த 12 மாதங்களுக்குள் சுமார் $6.5 பில்லியன் கடனை அடைதல் அவசியம். அரச வருமானத்தின் சுமார் 70% கடன்களின் வட்டிகளுக்கே செலவாகிறது.