ஜப்பானிய பெண் கொலை, அமெரிக்கர் கைது

Okinawa

ஜப்பானின் ஒக்கிநாவா (Okinawa) பகுதியில் வாழ்ந்த 20 வயது பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் இராணுவத்தினர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Kenneth Franklin Shinzato என்ற இந்த முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் இன்று ஒக்கிநாவா பகுதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஓக்கினாவாவில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றில் சாதாரண தொழில் புரிகிறார். Rina Shimabukuro என்ற இந்த 20 வயது பெண் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். விசாரணையின்போது Kenneth Franklin Shinzato வழங்கிய தகவல்கள் மூலம் இப்பெண்ணின் உடல் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
.
வரும் வெள்ளி அமெரிக்க ஜனாதிபதி ஜப்பான் செல்லவுள்ள வேளையில் இந்த கொலை விவகாரம் ஒபாமாவுக்கு பெரும் தலையிடியை கொடுக்கவுள்ளது. ஒபாமா அணுக்குண்டு போடப்பட்ட கிரோசிமா நகரும் செல்லவுள்ளார்.
.
தற்போது ஓக்கினாவாவில் உள்ள அமெரிக்காவின் பெரிய தளம் ஒன்றை ஒக்கினாவின் இன்னோர் இடத்துக்கு மாற்ற ஜப்பானின் மத்திய அரசு முனைகிறது. ஆனால் ஒக்கிநாவா அரசு அமெரிக்க படையை ஓக்கினாவாவில் இருந்து முற்றாக விலக்க விரும்புகிறது. இப்பெண்ணின் கொலை விவகாரம் அவ்விடயத்தில் மேலும் பிரிவை ஏற்படுத்தாலாம்.
.

ஜப்பானில் சுமார் 50,000 அமெரிக்க இராணுவம் உள்ளது. அதில் 25,000 ஒக்கிநாவா பகுதியில் உள்ளது. சீனாவுக்கு மிக அண்மையில் உள்ள ஒக்கிநாவா அமெரிக்காவுக்கு முக்கியமானதொரு தளமாகும்.
.