ஜப்பான் Mitsubishi, இந்திய Mahindra கூட்டுறவு

Mahindra

விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜப்பானின் Mitsubishiயும் இந்தியாவின் விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான Mahindraவும் கூட்டாக செயல்பட முன்வந்துள்ளன, அதன் பிரகாரம், Mahindra, Mitsubishi Agricultural Machineryயின் 33% பங்கினை கொள்வனவு செய்யும். இந்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$ 25 மில்லியன் ஆகும். அதன்படி Mahindra, Mitsubishiயின் வடிவமைப்பில் உருவான நெல் நடும் இயந்திரங்கள் (rice planters) போன்றவற்றை தயாரித்து உலகவில் விற்பனை செய்யும்.
.
ஜப்பானிய விவசாய முறை பல ஆசிய நாடுகளில் பரவி வருவதால், Mahindra அவ்வகைக்கு பயன்படும் இயந்திரங்களை விற்பனை செய்து தனது சந்தை வாய்ப்பை அதிகரிக்க முன்வந்துள்ளது.
.
அதேவேளை Mitsubishiயும் வேகமாக குறைந்து வரும் ஜப்பானிய விவசாயிகளின் எண்ணிக்கையினால் உருவான குறைபாட்டை நிவர்த்தி செய்ய Mahindraவை நாடுகிறது.
.
எண்ணிக்கையின் அடிப்படையில் Mahindraவே உலகின் அதி பெரிய tractor தயாரிப்பு நிறுவனமாகும்.