ஜூலை மாத $1 பில்லியன் கடனை அடைக்குமா இலங்கை?

ஜூலை மாத $1 பில்லியன் கடனை அடைக்குமா இலங்கை?

சுமார் $1 பில்லியன் பெறுமதியான இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் (ISBs, international sovereign bonds) ஜூலை மாதம் 27ம் திகதி முதிர்வடைகிறது. அதை அடைக்கும் நிலையில் இலங்கை உள்ளதா என்பது மீண்டும் கேள்விக்குறியாக உள்ளது. கடனை அடைக்க மீண்டும் கடன் பெறவேண்டிய நிலைக்கு இலங்கை மீண்டும் தள்ளப்படலாம்.

கடன் சுமையில் முறியக்கூடிய நிகழ்தகவை அதிகம் கொண்ட பப்புவா நியூகினி, கசகஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை பின்தள்ளிய இலங்கையின் கடனில் முறிவதற்கான நிகழ்த்தவு (debt default probability) தற்போது 28% ஆக உள்ளது என்கிறது Bloomberg. 

ஜூலை முதிர்வடையும் bond கடனை அடைக்க இலங்கை IMF (International Monitory Fund) அல்லது சீனா போன்ற நாடுகளின் உதவியை மீண்டும் நாடலாம்.

மார்ச் மாதம் இலங்கை சீனாவுடன் $1.5 பில்லியன் ($1,500 மில்லியன்), பங்களாதேசத்துடன் $250 மில்லியன், இந்தியாவுடன் $400 மில்லியன் currency swap களை செய்திருந்தது.

Currency swap கடனுக்கான வட்டி (interest) சுமையை குறைக்கும். அத்துடன் நாணய மாற்று வீத (exchange rate ) தளம்பலில் இருந்தும் பாதுகாக்கலாம். ஆனால் கடன் (loan) சுமையை குறைக்காது.

Finch Ratings தரவுகளின்படி 2026ம் ஆண்டு வரையான காலத்துள் இலங்கை சுமார் $29 பில்லியன் பெறுமதியான கடனை அடைக்கவேண்டும்.

இலங்கையின் மிகையான கடன் பளுவுக்கு அர்த்தமற்ற முதலீடுகள், கரோனா காரணமாக மத்திய கிழக்கு போன்ற இடங்களில் இருந்து வருமானம் கிடையாமை, ஆடை உற்பத்தி போன்ற உற்பத்திகள் குறைந்து ஏற்றுமதி வருமானம் குறைவது, உல்லாச பயணம் குறைந்து வருமானம் குறைந்தமை எல்லாமே காரணமாக உள்ளன.

இலங்கை 2020ம் ஆண்டில் 650 பில்லியன் ரூபாய்களை அச்சடித்து உள்ளது. கடந்த மாதம் மட்டும் 230 பில்லியன் ரூபாய்களை அச்சடித்து உள்ளது.