ஜெருசலேமில் அமெரிக்க தூதுவராலயம்?

Trump

தற்போது ரெல் அவிவ் (Tel Aviv) நகரில் உள்ள அமெரிக்காவின் இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை சர்ச்சசைக்குரிய ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு நகர்த்தும் திட்டத்தை நாளை அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அறிவிப்பார் என கூறப்படுகிறது. பல உலக நாடுகள் இந்த நகர்வை வன்மையாக கண்டித்துள்ளன.
.
1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அமெரிக்காவின் யூதர்கள் ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் ஒரு சட்டத்தை உருவாக்கியிருந்தது. அந்த சட்டப்படி அமெரிக்கா தனது இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை ஜெருசலேம் நகருக்கு நகர்தல் வேண்டும். அத்துடன் இந்த அமெரிக்க சட்டம் முழு ஜெருசலேமும் இஸ்ரவேலின் தலைநகர் என்றும் கூறி உள்ளது. அது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.
.
கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியை 1967 ஆம் ஆண்டில் இஸ்ரவேல் கைப்பற்றி இருந்தது.
.
1995 ஆம் ஆண்டுமுதல் மேற்படி சட்டத்தை நடைமுறை செய்யாமையை அமெரிக்க ஜனாதிபதிகள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் நீடித்து வந்திருந்தனர்.
.
பிரான்ஸ் ஜனாதிபதி Macron இந்த நகர்வை இன்று கண்டித்து உள்ளார். ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சரும் இந்த நகர்வை கண்டித்துள்ளார். Arab League அமைப்பும் இந்த நகர்வை கண்டித்துள்ளது.
.
ஆர்ப்பாட்டங்களும், சண்டைகளும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.