ஜேர்மனியின் தலைமையையும் ஒட்டுக்கேட்கும் அமெரிக்கா?

US-Germany

சீனா போன்ற நாடுகள் தம்மை உளவு பார்ப்பதாக குறைகூறும் அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளையே உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (ஐப்பசி 23, 2013) ஜேர்மனியின் தலைவி Angela Merkel அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து வெறுப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் தான் பிரெஞ்சு அரசுடன் அமெரிக்கா உளவு விடயம் சம்பந்தமாக சமரசம் பேசவேண்டி இருந்தது. மார்கழி 10, 2013 முதல் தை 8, 2013 வரையில் சுமார் 70 மில்லியன் இலத்திரனியல் தொடர்புகள் பிரான்சில் இருந்து NSA இனால் எடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

அமெரிக்காவின் இந்த தலையிடிகளுக்கு அமெரிக்காவின் உளவு நிறுவனமான NSA இனது முன்னாள் பணியாளர் Edward Snowdon பகிரங்கப்படுத்திய உண்மைகளும் காரணமாகும்.

அமெரிக்கா வழமைபோல் இந்த குற்றசாட்டுக்களை மறுத்து வருகிறது.