ஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி?

CO

ஜேர்மனியின் Arnstein நகரில் 6 இளைஞர்கள் carbon monoxide (CO) வுக்கு பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரும் 18, 10 வயது உடையவர் என்றும் கூறப்படுகிறது.
.
ஒரு வீட்டின் மகளும், மகனும், வேறு 4 இளஞர்களும் கடந்த சனி அன்று தமது வீட்டின் குடில் ஒன்றில் party ஒன்றை நடாத்தி இருந்தார்கள். ஆனால் தனது மகனும், மகளும் மறுநாள் வீடு வராததை அறிந்த தகப்பனார் தமது குடிலை சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு அவரின் மகன், மகள் உட்பட 6 பேரும் மரணமாகி உள்ளதை கண்டுள்ளார்.
.
மரணம் இடம்பெற்ற இடத்தில் எந்தவொரு வன்முறையும் இடம்பெற்றதுக்கான அடையாளம் இருந்திருக்கவில்லை. அனால் கடும் குளிரில் இருந்து நிவாரணம் பெற இவர்கள் அக்குடிசையில் இருந்த மர அடுப்பு ஒன்றை பாவித்து உள்ளமை தெரிந்துள்ளது. அந்த மர அடுப்பு பிறப்பித்த CO தான் இவர்களை கொலை செய்து இருக்கலாம் என்று இப்போது கருதப்படுகிறது.
.
நிறம் இல்லாத, வாடை இல்லாத, சுவை இல்லாத CO சுற்றாடலில் இருப்பதை அறிவது கடினம். சுமார் 100 ppm (particle per million) அளவிலான COவை சுவாசிக்கும் ஒருவர் 2 முதல் 3 மணித்தியாலங்களுக்குள் தலையிடியால் பாதிக்கபப்படுவர். 1600 ppm அளவிலான COவை சுவாசிக்கும் ஒருவர் 2 மணித்தியாலத்தில் மரணமாவார். 12,800 ppm அளவிலான COவை சுவாசிக்கும் ஒருவர் 3 நிமிடத்தில் மரணிப்பார்.
.

Carbon உள்ள பெட்ரோல், methane, propane, மரம், நிலக்கரி போன்றவற்றை எரிக்கும்போது CO உருவாகும்.
.