டென்மார்க்கையும் வசைபாடும் ரம்ப்

Denmark

தனக்கு ‘ஆமா’ போடாதவர்கள் எல்லோரையும் வசைபாடும் இயல்பு கொண்ட ரம்ப் தற்போது டென்மார்க்கையும் (Denmark), அதன் பிரதமர் Mette Frederiksen ஐயும் வசைபாட ஆரம்பித்து உள்ளார். டென்மார்க்கின் ஒரு அங்கமான கிறீன்லாண்டை (Greenland) அமெரிக்கா கொள்வனவு செய்யலாம் என்ற ரம்பின் அண்மைய கருத்தை டென்மார்க் உதாசீனம் செய்ததே ரம்பின் கொதிப்புக்கு காரணம்.
.
டென்மார்க்கின் பிரதமர் ரம்பின் கருத்தை ‘absurd’ என்று கூறி நிராகரித்தார். கொதித்துப்போன ரம்ப் பிரதமரை ‘nasty’ என்று வர்ணித்தார். பிரதமர் மட்டுமன்றி, அந்நாட்டின் அனைத்து தலைவர்களும் ரம்பின் கூற்றை நிராகரித்து இருந்தனர்.
.
இந்த விசயத்தால் ரம்ப் டென்மார்க்குக்கு செய்யவிருந்த பயணத்தையும் நிறுத்தி உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப். டென்மார்க் இராணி Margrethe IIவின் அழைப்பின் காரணமாக ரம்ப் வரும் செம்டம்பர் மாதம், 2 ஆம் திகதி டென்மார்க் செல்லவிருந்தார்.
.