திருடர்களை காவலுக்கு அழைக்கும் Microsoft

Hackers எனப்படும் இலத்தரனியல் திருடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனம் Microsoft. இதற்கு சில காரணங்கள் உண்டு. முதலாவது இந்த நிறுவனத்தின் மீதான வெறுப்பு. இரண்டாவது உலகின் 95% இற்கும் மேற்பட்ட கணனிகள் Microsoft operating system ஐ கொண்டவையே. அதிகமானோர் பாவிக்கும் உபகரணத்தை உளவு செய்வது அதிக பலனை தரும் என்பதால் hackers Microsoft ஐ முதலில் குறிவைப்பார். இந்த hackers களிடம் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா யுக்திகளையும் கையாண்டு தோல்வியுற்ற Microsoft, “if you can’t beat them, join them” என்று சொல்வதற்கு அமைய hackers களை காவலுக்கு அழைக்கிறது.

 

எதிர்வரும் புதன்கிழமை தனது Windows 8.1 ஐ சந்தைக்கு அறிமுகம் செய்யவிருக்கும் Microsoft, hackers களுக்கும் ஓர் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி எவராவது Microsoft தயாரிப்புகளில் பாரிய, இலத்திரனியல் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய தவறுகள் இருப்பதை கண்டுபிடித்து Microsoft இக்கு கூறின், அவர்களுக்கு US $100,000.00 சன்மானம் வழங்கப்படும். ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் உள்ள 14 வயதை தாண்டியோர் இதில் பங்குகொள்ளலாம். அந்த பிழைக்கு நிவாரணம் சொன்னால் மேலதிகமாக $50,000.00 வழங்கப்படும்.