துருக்கி குண்டு தாக்குதலுக்கு 28 பேர் பலி

Turkey

துருக்கியின் தலைநகர் அன்கராவில் (Ankara) இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஒன்றுக்கு 28 பேர் பலியாகியுள்ளதுடன் 60க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 6:30 மணியளவில் அந்நாட்டின் இராணுவ தலைமையும் அமைந்துள்ள இடத்திலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
.
இந்த தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கொண்டாடவில்லை.
.
துருக்கி தற்போது மூன்று எதிரிகளுடன் போராடுகிறது. அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுடன் இணைந்து IS என்ற குழுவுக்கு எதிராக போராடுகிறது. அதேவேளை அமெரிக்க ஆதரவுடன் போராடும் Kurdish போராளுக்கு எதிராகவும் துருக்கி போராடுகிறது. அத்துடன் சிரியாவின் அரசுக்கு எதிரான போராளிகளுடன் இணைந்து சிரியாவுக்கு எதிராகவும் போராடுகிறது.
.

கடந்த October மாதம் இங்கு இரண்டு தற்கொலையாளிகள் 100 இக்கும் அதிகமானோரை கொலை செய்திருந்தனர்.
.