தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கைது

ParkGeunHye

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Park Geun-hye இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இவரின் நண்பி ஒருவரின் இலஞ்ச வழக்கை மையமாக கொண்டே முன்னாள் ஜனாதிபதியும் கைது செய்யப்பட்டு உள்ளார். Seoul Central District Court இவரை இன்று வியாழன் சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரித்த பின்னரே கைதுக்கான ஆணை வழங்கப்பட்டது.
.
தென்கொரிய அரசியலிலுக்கு இலஞ்சம் மொத்தத்தில் அந்நியமானது அல்ல. Park Geun-hye கைது செய்யப்படும் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதி ஆவார்.
.
1988 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகித்த Chun Doo-hwanக்கு இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காக கீழ் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர் மேல் நீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இருந்தது.
.
1988 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த Roh Tae-woo இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காக 17 வருட சிறை தண்டனை பெற்றிருந்தார்.
.

Chun, Roh ஆகிய இருவரும் 1997 ஆம் ஆண்டில் மன்னிப்பு (pardon) மூலம் விடுதலை அடைந்திருந்தனர்.
.