தொடரும் அமெரிக்க-சீன வர்த்தக போர்

US_China

அமெரிக்காவின் ரம்ப் ஆட்சிக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்தும் உக்கிரம் அடைந்து வருகின்றது.
.
முன்னர் ரம்ப் தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அறவிடப்படும் மேலதிக இறக்குமதி வரியை (tariffs) மேலும் அதிகரிக்கவுள்ளதா கூறியிருந்தார். அதற்கு பதிலாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறைக்குமதி செய்யப்படும் $75 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அறவிட உள்ளதாக இன்று வெள்ளி கூறியுள்ளது.
.
சீனாவின் புதிய வரிகளுக்குள் அமெரிக்காவின் Tesla, Ford போன்ற வாகனங்கள், தொழிநுட்ப பாகங்கள் என்பனவும் அடங்கும்.
.
சீனாவின் இந்த புதிய வரியால் சினம் கொண்ட ரம்ப் அமெரிக்க வர்த்தகங்கள் சீனாவுக்கு அப்பால் தமது வர்த்தகங்களை நகர்த்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
.
சீனாவின் அறிவிப்பால் அமெரிக்காவின் வர்த்தக சந்தையும் (DOW) 620 புள்ளிகளுக்கு மேலாக இன்று வெள்ளி வீழ்ந்துள்ளது.

.