தொடர்கிறது Cold-War, எரிகிறது யுக்கிரேன் – 2

Crimea

கருங்கடலின் (Black sea) வடக்கே அமைந்துள்ள Crimea (கிரைமிய) பல நூற்றாண்டு காலமாக இரத்தக்களங்கள் கண்ட குடா. மொங்கோலியன் (Mongolian) முதல் ஒற்றமன் (Ottoman) வரை, ரஷ்யன் முதல் ஜேர்மன் வரை எல்லோரும் அவ்வப்போது கைப்பற்றி ஆண்ட குடா இது. இரண்டாம் உலக யுத்தத்தின் முன் Crimea ரஷ்யாவின் கையில் இருந்தது. யுத்த முடிவில் Ukraine (யுக்கிரைன்) USSR இன் அங்கமாக்கப்பட்டபோது Crimea, அலுவலக முறையில் Ukraine இன் பாகமானது. 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் உடைவின் பின், மீண்டும் யுக்கிரேன் தனி நாடானது. அத்துடன் Crimea வும் Ukraine க்கு கொடுக்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவின் Black Sea Fleet என்ற படைப்பிரிவு Crimea குடாவில் உள்ள Sevastopol என்ற துறைமுக நகரில் உள்ளது. இந்த படை தளத்தின் அடி 1783 ஆம் ஆண்டில் தொடங்கியது.

அண்மையில் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த ரஷ்யா சார்பு அரசை வீதி போரட்டங்கள் மூலம் Ukraine இன் தலைநகர் Kiev (கியேவ்) இல் இருந்து விரட்டியது மேற்கு நாடுகள் சார்பு எதிர்க்கட்சி. Kiev உட்பட மேற்கு Ukraine இல் உள்ளோர் பெரும்பாலும் யுக்கிறேனியர். யுக்கிரேனின் சனத்தொகையின் 17% ரஷ்யர், இவர்கள் பெரும்பாலும் நாட்டின் கிழக்கே வாழ்பவர்கள். அனால் Crimea குடாவில் 58% இக்கும் அதிகமானோர் ரஷ்யர். இந்த குடாவை இப்போ ரஷ்யாவின் படைகளின் ஆக்கிரமித்துள்ளதாக கூறும் மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவும் கனடாவும் ரஷ்யாவுக்கான தமது தூதர்களை திருப்பி அழைத்துள்ளன. ஒபாமா உட்பட பல மேற்கின் தலைவர்கள் ரஷ்யா மீது எச்சரிக்கைகளையும் விட்டுள்ளனர். இவ்விடயம் சம்பந்தமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவின் ஜனாதிபதி Putin உடன் 90 நிமிடங்கள் தொலைபேசி மூலம் கதைத்திருந்தாராம்.

கடந்த சில கிழமைகளாக மேற்கு நாடுகள் Ukraine எதிர் கட்சியின் புரட்சியை தட்டிக்கொடுத்து வளர்த்து வந்திருந்தாலும் ரஷ்யாவின் தலைவர் Putin அமைதியா இருந்து வந்திருந்தார். அதற்கு காரணம் ரஷ்யாவின் நகரான Sochi இல் ஒலிம்பிக் நடைபெற்று வந்தது. இப்போ Putin இக்கு அந்த கவலை இல்லை.

இப்போது கருங்கடலின் வடக்கே நடைபெறும் நாடகம் 2008 ஆம் ஆண்டில் கருங்கடலின் கிழக்கேயும் நடைபெற்றிருந்தது. USSR உடைந்தபோது உருவான Georgiaவுக்குள் இருந்த South Ossetia பகுதியும் Abkhazia பகுதியும் இப்போ ரசியாவின் பாதுகாப்பில் உள்ள, சில நாடுகளால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனி நாடுகள். இவ்விடயத்திலும் மேற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.Crimea வும் இந்நிலைக்கு ஆளாகலாம். சிலவேளைகளில் Ukraine இரண்டாகவும் உடையலாம்.