நோயாளிகளின் தரவுகளை கைக்கொள்ளும் Google

Google_Ascension

உலகின் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் (Google) ஆரம்பத்தில் “Dont be Evil” என்ற கொள்கையை கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிறுவனம் முன்னருக்கு முரணாக செயல்படுகிறது. The Wall Street Journal செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆக்கம் ஒன்றின்படி Google நிறுவனம் Ascension என்ற அமெரிக்க வைத்தியசாலை நிறுவனத்துடன் வர்த்தக உறவு கொள்வதன் மூலம் அந்த வைத்தியசாலையின் அங்கத்துவ நோயாளிகளின் தவுகளை கைக்கொள்கிறது.
.
ஒரு தொழிநுட்ப நிறுவனத்துக்கும் நோயாளிகளுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் இல்லை என்றாலும், நோயாளிகளின் தரவுகள் வர்த்தக விளம்பரங்களுக்கு பெரிதும் பயன்படும் என்பதாலேயே கூகிள் இந்த பின்கதவு வழியை கையாண்டுள்ளது.
.
நோயாளிகளின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், ஈமெயில், நோய்கள், நோய் அறிகுறிகள், அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள், அவர்களின் வைத்திய பரிசோதனை முடிவுகள் எல்லாமே கூகுளுக்கு தேவை. ஆனால் இவற்றை இலகுவில் பெற முடியாது. வைத்தியசாலைகள் இவற்றை பாதுகாப்பது சட்டப்படியான கடமை. ஆனால் கூகிள் வைத்தியசாலையுடன் வர்த்தகத்தில் இணைவது மேற்கூறிய தடைகளில் இருந்து தப்பிக்க உதவுகிறது.
.
மேற்படி வர்த்தக உறவு நோயாளிகளினதோ, அல்லது அவர்களின் வைத்தியரினதோ உத்தரவு இன்றி நோயாகிகளின் தவுகளை கூகிளுக்கு வழங்க வழி செய்கிறது. Privacy என்பதற்கு அமெரிக்காவில் இனிமேல் இடமே இல்லை.
.
Ascension வைத்திய சேவை அமெரிக்காவில் சுமார் 150 வைத்தியசாலையை கொண்டுள்ளது. கடந்த வருடம் இது $25 பில்லியன் வருமானத்தை கொண்டிருந்தது.
.