பகிரங்கத்துக்கு வரும் மறைவிட வங்கி கணக்குகள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Cayman தீவு (Cayman Island), Mann தீவு (Isle of Man), British Virgin Island, Bermuda போன்ற இடங்களில் வெளிநாட்டவர் இரகசிய வங்கி கணக்குகள், நிறுவனங்கள் போன்றவற்றை வைத்திருக்க முடியும். அவ்வாறு வைப்புகள், சொத்துகளை வைத்திருப்போரின் பெயர், முகவரி போன்ற விடயங்களை இந்த அரசுகள் இரகசியமாக வைத்திருக்கவும் உதவும்.

அமெரிக்கா, கனடா போன்ற செல்வந்த நாட்டு திருட்டு செல்வந்தர்களும் சில வறிய நாட்டு திருட்டு பண உரிமையாளர்களும் இங்கு சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதன்மூலம் இவர்கள் தமது நாடுகளில் வரி செலுத்தாதும் தப்பி விடுகின்றனர்.

இப்போது வந்துள்ளது இவர்களுக்கு தொல்லை. இவ்வாறு கள்ளமாக சொத்துக்களை ஒழித்து வைத்திருப்போர் பல்லாயிரமானோரின் வங்கி கணக்கு விபரங்கள் சிலரால் பகிரங்கப்படுத்தப்படு உள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட International Consortium of Investigative Journalists என்ற இயக்கமே இவ்வாறு உண்மைகளை பகிரங்கப்படுத்தி உள்ளது.

கனேடிய Senator Pana Merchant உட்பட 450 இற்கும் மேற்பட்ட கனேடியர், முன்னாள் அமரிக்க ஜனாதிபதி வேட்பாளர் Mitt Romney, கொலம்பிய நாட்டு முன்னாள் ஜனாதிபதியின் இரு மகன்கள், Georgia நாட்டின் பிரதமர், Mongolia நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர், பிலிப்பீன் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகள் Imee Marcos, Azerbaijan இல் ஆட்சியில் உள்ளோர் ஆகியோரும் அடங்குவர்.

கடந்த கார்த்திகை மாதத்தில் HSBC வங்கியின் ஊழியர் ஒருவரும் இவாறான 8000 கணக்கு விபரங்களை பகிரங்கப்படுத்தி இருந்தார்.

தகவல்: http://www.icij.org/