பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி நிலையம் உடைந்து 120 வரை பலி

பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி செய்யும் 8 மாடி கட்டம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 120 பணியாளர்வரை மரணமாகி உள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு வடக்கே 20 km தூரத்தில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9:00 மணியவில் இச்சம்பவம் இடப்பெற்றுள்ளது. மேலும் 5000 பணியாளர்வரை இடிபாடுகளுள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்கு நாட்டு பிரபல ஆடை நிறுவனங்கள் இங்கே தமது ஆடைகளை உற்பத்தி செய்வதுண்டு. Calvin Klein, Tommy Hilfiger, Gap போன்ற நிறுவனங்களும் Wal-Mart போன்ற விற்பனை நிலையங்களும் இதில் அடங்கும். பங்களாதேசில் சுமார் 4500 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உண்டு. இவை சுமார் US $24 பில்லியன் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன, இது அந்நாட்டின் 80% ஏற்றுமதி.

பங்களாதேச தொழில்சாலைகள் மிகவும் ஆபத்து நிறைந்தவை. கடந்த கார்த்திகை மாதத்தில் Tazeen Fasion என்ற ஆடை தயாரிப்பு நிலைய தீ விபத்துக்கு 110 இக்கும் மேலானோர் பலியாகி இருந்தனர்.

2005 இல் Spectrum என்ற ஆடை தயாரிப்பு நிலையம் உடைந்து வீழ்ந்ததில் 64 பணியாளர் வரை மரணமாகியிருந்தனர்.