பங்கு சந்தையில் $25.6 பில்லியன் திரட்டியது Aramco

Aramco

பங்கு சந்தை IPO (Initial Public Offering) மூலம் முதலீடு திரட்ட சென்ற சவுதி அரேபியாவின் Aramco என்ற எண்ணெய்வள நிறுவனம் இன்று $25.5 பில்லியனை திரட்டி உள்ளது. இதுவரை IPO மூலம் அதிகம் முதலீட்டை திரட்டிய நிறுவனமாக $25 பில்லியன் திரட்டிய சீனாவின் Alibaba நிறுவனம் விளங்கி இருந்தது. தற்போது Aramco முன்னணியில் உள்ளது.
.
Aramco முதலில் $100 பில்லியன் திரட்ட விரும்பி இருந்தாலும், மேற்குநாட்டு முதலீட்டாளர் பின்வாங்க, அது தனது எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டது. இந்த நிறுவனத்தின் 1.5% பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு $25.6 பில்லியன் பெறப்பட்டது. அதன்படி இந்த நிறுவனத்தின் மொத்த வெகுமதி (100% பெறுமதி) சுமார் $1.7 டிரில்லியன் (1,700 பில்லியன்) ஆக உள்ளது. அதனால் தற்போது உலகத்தில் அதி பெறுமதியான நிறுவனமாக Aramco உள்ளது. இதன் IPO பங்கு ஒன்றின் விலை 32 சவுதி ரியால் ($8.53) பெறுமதியை கொண்டிருந்தது.
.
மேற்கு நாடுகள் பின்வாங்க, சவுதி உள்ளூர் மற்றும் மத்திய கிழக்கு முதலீடுகளை குறிவைத்து. சவுதி வங்கிகளும் Aramco பங்கு கொள்வனவுக்கு குறைந்த வட்டி கடன் வழங்கியது.
.
மேற்கு நாடுகளின் முதலீடுகள் இன்றி Aramco பங்கு தொடர்ந்தும் தனது பெறுமதியை கொண்டிருக்குமா என்பதை வரும் சில கிழமைகளில் அறியலாம்.
.
அமெரிக்காவின் Apple நிறுவனம் சுமார் $1.19 டிரில்லியன் சந்தை வெகுமதியுடன் இரண்டாம் இடத்திலும், $1.15 டிரில்லியன் வெகுமதியுடன் உள்ள Microsoft மூன்றாம் இடத்திலும் உள்ளன.
.