பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் Lecomte

Lecomte

பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரெஞ்சு நாட்டு Ben Lecomte என்பவர். சுமார் 9,000 km நீளம் கொண்ட இவரின் நீச்சல் ஜப்பானின் கிழக்கு கரையில் ஆரம்பித்து அமெரிக்காவின் மேற்கு கரையான San Franciscoவில் முடிவடையும். இந்த சாதனையை இவர் வெற்றிகரமாக நிறைவு செய்தால் இவரே பசுபிக் கடலை நீந்திக்கடந்த முதலாவது நபர் ஆவார்.
.
தான் தினமும் 8 மணித்தியாலங்கள் நீந்தவுள்ளதாக இவர் கூறியுள்ளார். இவருக்கு உதவியாக வள்ளம் ஒன்று இவருடன் பயணிக்கும். இந்த வள்ளத்தில் இவர் உணவு உண்டு, ஓய்வு எடுத்து, நித்திரை செய்து பயணிப்பார். இவரின் பயணம் சுமார் 6 மாதங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
.
தற்போது 51 வயதுடைய இவர் முன்னர் அத்திலாந்திக் கடலையும் நீந்தி கடந்திருந்தவர். 1998 ஆம் ஆண்டில் அத்திலாந்திக் கடலை கடக்க இவருக்கு 73 நாட்கள் எடுத்திருந்தது.
.

இவரின் பயணம் அமெரிக்காவுக்கும் ஹவாய்க்கும் இடையில் மிதந்துகொண்டிருக்கும், சுமார் 1.6 மில்லியன் சதுர km பரப்பளவு கொண்ட, 80,000 தொன் எடை கொண்ட கழிவுகளையும் எடுத்துக்காட்டும். மிதக்கும் இந்த கழிவுகளின் 20% கழிவுகள் 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற சுனாமியால் உருவானது என்றும் கூறப்படுகிறது.
.