பசுமையாக்களில் சீனா, இந்தியா முன்னணியில்

ChinaIndia

தாவர வளர்ப்பில் சீனாவும், இந்தியாவும் முன்னணியில் உள்ளதாக நாசா (NASA) இன்று திங்கள் கூறியுள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை Terra மற்றும் Aqua செய்மதிகள் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தாவர வளர்ப்பில் பிரதானமாக காடு வளர்ப்பும், விவசாய பயிர் வளர்ப்பும் அடங்கும். நாசாவின் Nature Sustainability என்ற தலைப்பிலான ஆய்வு பத்திரிகையிலேயே இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.
.
சீனா காடு வளர்ப்பு, விவசாய வளர்ப்பு இரண்டையும் சிறப்பாக செய்யும் வேளையில், இந்தியா பெருமளவில் விவசாய பயிர் வளர்ப்பிலேயே ஈடுபட்டுள்ளது.
.
சீனாவே உலகின் மொத்த பசுமை பிரதேச அதிகரிப்பின் 25% பங்கை கொண்டுள்ளது. சீனாவின் பசுமையாக்கத்தின் 42% காடு வளர்ப்பிலும், 32% விவசாய பயிர் வளர்ப்பிலும் உள்ளன. நிலவளத்தை பாதுகாத்தல், சூழல் மாசுபடுவதை தடுத்தல் போன்ற விடயங்களில் சீனா சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறது நாசா.
.
இந்தியாவில் 82% பசுமையாக்கம் விவசாயம் சார்ந்ததாகவும், 4.4% மட்டுமே காடு வளர்ப்பு சார்ந்ததாகவும் உள்ளன.
.
2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சீனாவும் இந்தியாவும் தமது தாவர உணவு உற்பத்தியை 35% ஆல் அதிகரித்து உள்ளன. இந்த அதிகரிப்புக்கு அதிக நிலத்தில் பயிரிடல், பல போகம் பயிரிடல், இரசாயனங்களை பாவித்தல் போன்றன காரணங்களாக உள்ளன.

.