பட்டேலுக்கு உலகின் மிகப்பெரிய சிலை

GandhiNehruPatel

 

அண்மைய தேர்தலின்பின் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி அரசு தமது மதிய அரசுக்கான வரவுசெல்வில் US $33 மில்லியனை Sardar Vallabhbhai Patelஇக்கு ஒரு சிலை அமைப்பதற்கு ஒதுக்கியுள்ளது. இந்த சிலை அமைப்பு வேலைகள் மோடி மத்திய அரச தேர்தலில் வெல்வதற்கு 6 மாதங்கள் முன்னரேயே ஆரம்பிக்கபட்டு இருந்தது. அப்போது இந்த சிலைக்கான மொத்த செலவையும் குஜராத் மாநில அரசே செலுத்தும் என்று கூறப்பட்டது இருந்தது. மோடி அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்திருந்தார். இதன் மொத்த செலவு சுமார் $338 மில்லியன் ஆக இருக்கும்.
.
பட்டேல், முன்னாள் பிரதமர் நேருவுக்கு நிகராக காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைக்கு போராடியவர்.
.
உலகின் அதி உயரமான இருக்கப்போகும் இந்த சிலை 182 மீட்டர் உயரமானதாக இருக்கும். இது 93 மீட்டர் உயரமான நியூ யோர்க் சுதந்திர மாதா சிலையைவிட சுமார் இரண்டு மடங்கு உயரமாக இருக்கும்.
.
2008 ஆம் ஆண்டு சீனாவில் கட்டி முடிக்கப்பட்ட, 183 மீட்டர் உயரமான Spring Temple புத்தர் சிலையே தற்போது உலகின் முதலாவது பெரிய சிலையாகும். 1993 ஆம் ஆண்டு ஜப்பானில் கட்டி முடிக்கப்பட்ட, 120 மீட்டர் உயரமான, Ushiku Daibutsu புத்தர் சிலையே தற்போது இரண்டாவது பெரிய சிலையாகும்.
.

அதேவேளை இங்கிலாந்து பாராளுமன்றின் வளாகத்தில் மகாத்மா காந்திக்கு சிலை ஒன்று அமைக்கவுள்ளதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.