பர்மாவில் 18 ஆர்ப்பாட்டகாரர் பலி

பர்மாவில் 18 ஆர்ப்பாட்டகாரர் பலி

பர்மாவில் இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு இன்று ஞாயிரு 18 பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது. அத்துடன் மேலும் 30 பேர் காயப்பட்டும் உள்ளனர்.

பெப்ருவரி 1ம் திகதி அங்கு இராணுவ கவிழ்ப்பு இடம்பெற்று இருந்தது. சனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட Aung San Suu Kyi உடனே இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இதுவரை தடுப்பில் உள்ளார். மேலும் சுமார் 1,000 Aung San Suu Kyi கட்சியின் உறுப்பினர்களும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெப்ருவரி ஆட்சி கவிழ்ப்பு முதல் இதுவரை மொத்தம் 21 இராணுவ ஆட்சி எதிர்ப்பாளர் படைகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

பர்மாவின் பெரிய நகரான ரங்கூன் (Yangon), இரண்டாம் நகரான Mandalay, Dawei, Myeik, Bago உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

ஐ. நாவுக்கான பர்மாவின் தூதுவர் Kyaw Moe இராணுவ ஆட்சியை கண்டித்த பின், அவரை இராணுவம் தூதுவர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. Kyaw Moe பர்மாவில் இராணுவ ஆட்சியை நிறுத்த உதவி செய்யும்படி ஐ.நாவை கேட்டுள்ளார்.