பலஸ்தீனர் இன்றி பலஸ்தீனர் மாநாடு

Palestine

அமெரிக்க அதிகாரிகள் பலஸ்தீனர்களுக்கு உதவுவது தொடர்பாக மாநாடு ஒன்றை பஹ்ரேய்ன் (Bahrain) நாட்டின் மனமா (Manama) நகரில் வரும் ஜூன் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நிகழ்த்தவுள்ளதாக கூறியுள்ளனர். அனால் பாலஸ்தீனர்கள் அந்த மாநாடு தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றுள்ளனர்.
.
நேற்று அமெரிக்கா இந்த மாநாடு தொடர்பான செய்தியை அறிவித்து இருந்தாலும், தமக்கு இந்த விசயம் தொடர்பாக எதுவும் தெரியாது என்றுள்ளார் பலஸ்தீன பிரதமர்.
.
இந்த மாநாட்டின் தலைப்பே (Peace to Prosperity) பலஸ்தீனர்கள் மீதான ஆக்கிரமிப்பை கையாள்வதற்கு பதிலாக, பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கம் கொண்டது போல் உள்ளது. அமெரிக்கா சார்பில் தற்போது பலஸ்தீனர் விசயத்தை கையாள்வது ரம்பின் மருமகனே. ரம்பின் மக்களை திருமணம் செய்த இவர் ஒரு யுத்தர் ஆவார்.
.
இவ்விசயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பொருளாதார சலுகைகளை பெறுவதற்காக தமது அரசியல் உரிமைகளை கைவிட முடியாது என்றுள்ளார் பலஸ்தீன பிரதமர். பலஸ்தீனர் எவராவது இந்த மாநாட்டில் பங்கு கொண்டால், அவர்கள் அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இணைந்து செயல்பட்டு பலஸ்தீனர்க்கு துரோகம் விளைவிப்பவரே என்றும் பலஸ்தீன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
.