பாகிஸ்தானிலிருந்து கம்போடியா போகும் இலங்கை யானை

பாகிஸ்தானிலிருந்து கம்போடியா போகும் இலங்கை யானை

பாகிஸ்தானில் உள்ள காவன் (Kaavan) என்ற வயது முதிர்ந்த ஆண் யானை ஒன்று கம்போடியா செல்கிறது. ஊழல் காரணமாக தற்போது அந்த யானை உள்ள Marghuzar மிருகக்காட்சி சாலை தரம் அற்றது என்றபடியால், நீதிமன்றம் அந்த காட்சி சாலையை மூட கட்டளையிடுள்ளது.

Four Paws International என்ற அமைப்பும், Friends of Islamabad Zoo என்ற அமைப்பும் இணைந்து காவனை சரணாலயம் அனுப்பும் நற்பணியை செய்கின்றன.

இதனுடன் இருந்த Saheli என்ற  பங்களாதேசத்து  பெண் யானை 2012 ஆம் ஆண்டு இறந்துள்ளது. அன்றில் இருந்து தனியே வாழும் காவனை கம்போடியாவில் உள்ள சரணாலயம் ஒன்றில் பராமரிக்கும் நோக்கில் அங்கு விமானம் மூலம் எடுத்து செல்லபப்டுகிறது. இந்த யானையே முதல் தடவையாக மிக நீண்ட தூரம் விமானத்தில் பயணிக்க உள்ளது.

இந்த யானை இலங்கையின் பின்னவல சரணாலயத்தில் (Pinnawala Orphanage) குட்டியாக இருந்தது. அதை 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்துக்கு அப்போது பாகிஸ்தானில் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஜெனரல் ஷியா உல் ஹக் உதவியதால் அவருக்கு வழங்கப்பட்டது.

ஷியாவின் மகள் Zain Zia இந்திய திரைப்படமான Haathi Mere Saathi (யானைகள் எனது நண்பர்கள்) யை பார்த்த பின் யானையை விரும்பியதால் தகப்பனார் ஷியா காவனை இறக்குமதி செய்திருந்தார்.

இந்த யானைகள் 60 முதல் 70 ஆண்டுகள் வரை வாழும்.