பாகிஸ்தானுள் நுழைந்து இந்தியா தாக்குதல்

Kashmir

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, அங்கிருந்த ஆயுத குழு மீது தாம் தாக்குதல் நடாத்தி உள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஆயுத குழு ஒன்று இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, இந்திய இராணுவ முகாம் ஒன்றை (Uri) தாக்கி இருந்தது. அதில் 18 இந்திய இராணுவத்தினர் பலியாகி இருந்தனர்.
.
இந்தியாவின் தாக்குதலுக்கு உண்மையில் எவ்வளவு எதிரிகள் பலியாகினர் என்பதை அறிய முடியாவிடினும், இந்தியா தாம் “double digits” பயங்கரவாதிகளை கொலை செய்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இரண்டு பாகிஸ்தானின் இராணுவம் மட்டும் பலியாகி உள்ளதாக கூறியுள்ளது. அத்துடன் இந்தியா எல்லை கடந்து தாக்குதல் செய்யாது, ஏறிகணை மூலமே தாக்குதல் செய்துள்ளது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
.
இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை நான்கு யுத்தங்களை செய்து உள்ளனர். தற்போது பாகிஸ்தான் பக்க காஷ்மீரில் சுமார் 200,000 இராணுவமும், இந்தியா பக்கத்தில் சுமார் 700,000 இராணுவமும் நிலை கொண்டுள்ளன.
.
அமெரிக்கா வெளியுறவு செயலாளர் John Kerry இரண்டு தடவைகள் இந்தியாவுடன் தொடர்புகொண்டு, பதற்ற நிலையை மேலும் குழப்பமாக்க வேண்டாம் என்று கேட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
.