பாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தைகள்

Dow

கொரோனா வைரஸ் உட்பட பல்வேறு காரணங்களால் உலகின் பல்வேறு பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை இந்த கிழமை அடைந்துள்ளன. முக்கியமாக அமெரிக்க பங்கு சந்தைகளான DOW (Dow Jones Industrial Average), NASDAQ, S&P 500 என்பன என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை அடைந்துள்ளன. வியாழக்கிழமை DOW அடைந்த வீழ்ச்சி அதன் வரலாற்றில் இடம்பெற்ற அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி ஆகும்.
.
DOW பங்கு சந்தையின் இந்த கிழமை வீழ்ச்சி வருமாறு:
 கிழமை  DOW வீழ்ச்சி  வீழ்ச்சி %
 திங்கள்  1,031 புள்ளிகள்  3.59%
 செவ்வாய்  809 புள்ளிகள்  3.2%
புதன்  124 புள்ளிகள்  0.46%
 வியாழன்  1,191 புள்ளிகள்  4.4%
 வெள்ளி  357 புள்ளிகள்  1.39%
​.
Apple, Microsoft, Amazon, Tesla போன்ற பல வலுவான நிறுவனங்களும் இந்த கிழமை பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன. கொரோனா வைரஸின் பாதிப்பின் பக்க விளைவாக தோன்றியுள்ள பொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் பங்கு சந்தைகள் சரிய காரணமாக உள்ளன. விமான சேவைகள் போன்ற போக்குவரத்துக்கு நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள், அரங்கு நிகழ்ச்சிகளை நடாத்தும் நிறுவனங்கள் போன்றனவும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
​.​
அமெரிக்க பங்கு சந்தையில் உள்ள முதல் பெரிய 500 நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய S&P 500 Index மட்டும் இந்த கிழமை $3.4 டிரில்லியன் ($3,400 பில்லியன் அல்லது $3,400,000 மில்லியன்) பங்கு சந்தை வெகுமதியை இழந்துள்ளது.
.