பிடேல் காஸ்ரோ 90 வயதில் மரணம்

Cuba-Am

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடேல் காஸ்ரோ இன்று தனது 90 ஆவது வயதில் காலமானார். இவர் ஒரு இடதுசாரி தலைவராக அமெரிக்காவின் மிக அருகில் இருந்து வலதுசாரி நாடுகளுக்கு cold war காலத்தில் முக்கிய நிகழ்வுகளை நடாத்தியவர்.
.
ஸ்பெயின் நாட்டிலுருந்து வந்து குடியேறிய ஒருவருக்கு பிறந்த காஸ்ரோ கரும்பு செய்கையில் முன்னணியில் இருந்தவர். இவர் பல்கலைக்கழத்தில் சட்டம் படிக்கும் போதே, அமெரிக்கா நிறுவனங்கள் தமது நாட்டிடை சுரண்டுவதை எதிர்த்தவர். அதன் காரணமாக முதலாளித்துவத்தை எதிர்க்க ஆரம்பித்தார். அமெரிக்காவின் ஆதரவுடன் கியூபாவை சுரண்டிய ஆட்சியை பின்னர் புரட்சி மூலம் விரட்டி இருந்தார். இவர் 1959 ஆம் ஆண்டில் கியூபாவின் ஆட்சியை கைப்பற்றி இருந்தார். கடும் சுகவீனம் காரணாமாக 2008 இல் தலைமை பதவியை தனது சகோதரர் ராகுலுக்கு வழங்கி இருந்தார்.
.
காஸ்ரோவை கொல்ல, அவரின் அரசிய கவிழ்க்க CIA பல முயற்சிகள் செய்தும், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்து இருந்தன. இவற்றை மிகப்பெரியது 1961 ஆம் ஆண்டு Bay of Pigs என்ற கரையோர இடத்தில் இறங்கி தாக்குதல் நடாத்த முனைந்ததுவாகும். CIA தலைமையில், பல்லாயிரம் காஸ்ரோ எதிர்ப்பாளர்களையும் பயன்படுத்தி இந்த தாக்குதல் இடம்பெற்றது. அனால் காஸ்ரோ அணி அதையும் முறியடித்து இருந்தது. CIA தலைமையிலான அணி 118 உயிர் இழப்புக்களையும், 360 காயமடைந்தோரையும், 1200 பேரை கைதிகளாகவும் கொடுத்து பின்வாங்கியது. அத்துடன் 4 குண்டு வீச்சு விமானங்களையும், 2 கப்பல்களையும் அமெரிக்கா இழந்து இருந்தது.
.
1962 ஆம் ஆண்டில் சோவித்தின் அணுக்குண்டு ஏவுகணைகள் கியூபாவில் நிலைகொள்ள வைத்ததை தொடர்ந்து, அமெரிக்காவும், சோவித்தும் நேரடியாக மோதும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஆனால் John F. Kennedy நேரடி மோதலை தவிர்த்து இருந்தார். ஏவுகணைகளும் பின்வாங்கப்பட்டன. துருக்கியில் இருந்த அமெரிக்க ஏவுகணைகளும் பின்வாங்கப்பட்டன.
.
பொருளாதாரத்தை முறிந்துபோன கியூபா தற்போது அமெரிக்காவின் முதலீடுகளை நாடி உள்ளது. அமெரிக்காவும் கியூபா மீதான தடைகளை இரத்து செய்து வருகிறது.
.