பிரதமர் மேயின் Brexit முயற்சி மீண்டும் தோல்வியில்

UK

பிரித்தானிய பிரதமர் தெரசா மேயின் (Theresa May) Brexit திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு மீண்டும் பிரித்தானிய பாராளுமன்றில் தோல்வி அடைந்துள்ளது. மேயின் திட்டத்துக்கு ஆதரவாக 286 வாக்குகளும், திட்டத்துக்கு எதிராக 344 வாக்குகளும் கிடைத்துள்ளன. இது 3வது தடவையாக ஏற்பட்ட தோல்வியாகும்.
.
இந்த தோல்வியால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி மே மாதம் 22ஆம் திகதி வெளியேறுவது சாத்தியம் அற்றுள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன் பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை நீடிக்காவிடின், பிரித்தானியா இணக்கம் இன்றிய (no-ideal) வெளியேற்ற நிலைக்கு தள்ளப்படலாம்.
.
பல தடவைகள் பிரதமர் மேயின் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் எதிர் கட்சி உறுப்பினர் பிரதமரை பதிவியில் இருந்து விலகுமாறு கேட்டுள்ளனர்.
.