பிரான்சில் மாணவர்க்கு smartphone தடை

France

இந்த மாதம் முதல் பிரான்சில் மாணவர்கள் பாடசாலையில் smartphone பயன்படுத்துவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. வகுப்பறை மட்டுமன்றி, பாடசாலையின் மைதானம் போன்ற பகுதிகளிலும் இந்த smartphone பயன்பாட்டு தடை நடைமுறையில் இருக்கும்.
.
முதலாம் வகுப்பு மாணவர் முதல் ஒம்பதாம் வகுப்பு மாணவர் வரை இந்த தடைக்கு உள்ளாவர்.
.
கடந்த வருட கணிப்பின்படி, பிரான்சில் 12 வயது முதல் 17 வயது வரையான மாணவர்களுள் 93% மாணவர்கள் smartphone வைத்திருந்துள்ளனர்.
.
மாணவர்கள் smartphone களை தமது பைகளுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் அதை பயன்படுத்த முடியாது. மாணவர் பயன்படுத்துவது அறியப்படின், அந்த smartphone பாடசாலையால் பறிமுதல் செய்யப்படலாம்.
.
டென்மார் அரசும் இவ்வாறான அணுகுமுறை ஒன்றுக்கு முனைந்து வருகிறது. பிரித்தானியாவில் பாடசாலைகள் தமது அணுகுமுறைகளை கொண்டுள்ளன.
.