பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு வரும் திருடப்பட்ட சிலைகள்

பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு வரும் திருடப்பட்ட சிலைகள்

தமிழ்நாட்டின் ஆனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி ஆலயத்தில் இருந்து 1978 ஆம் ஆண்டு திருடப்பட்ட இராமர், சீதை, அனுமார் சிலைகள் பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு திரும்புகின்றன. இந்த பித்தளை சிலைகள் 15 ஆம் நூற்றாண்டு விஜயநாகரா (Vijayanagara) ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சிலைகளின் புகைப்படம் ஒன்று British Antique Dealers’ Association என்ற நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் இணையத்தில் இருப்பதை இந்தியாவின் India Pride Project என்ற அமைப்பு கண்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் இருந்து களவாடி வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்ட நூதன பொருட்களை இந்தியாவுக்கு மீட்க நடவடிக்கைள் எடுக்கின்றது.

1958 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மேற்படி சிலைகளின் புகைப்படம் ஒன்று பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheery யில் இருந்ததுள்ளது. 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி மேற்படி களவு தொடர்பாக போலீஸ் முறைப்பாடு ஒன்றும் பதிவாகி உள்ளது. அவற்றை ஆதாரமாக கொண்டு மேற்படி சிலைகளின் உரிமையை நிரூபித்தனர். அதன்படி சிலைகள் தமிழ்நாடு மீள்கின்றன.

திருடப்பட்ட சிலைகள் எவ்வாறு பிரித்தானியா சென்றன என்பது இதுவரை அறியப்படவில்லை.