பிரித்தானிய பிரதமரையும் ரம்ப் அவமதிப்பு

Trump

இதுவரை காலமும் வசைபாடாத பிரித்தானிய பிரதமர் தெரசா மேயையும் ரம்ப் இன்று அவமதித்து கருத்துக்கள் வெளியிட்டு உள்ளார். இந்த கருத்துக்களை ரம்ப் The Sun பத்திரிகைக்கு வழங்கி உள்ளார்.
.
பிரித்தானியா எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் தான் பிரித்தானிய பிரதமர் மேக்கு வழங்கிய அறிவுரைகளை பிரதமர் ஏற்கவில்லை என்றும், பதிலாக பிரதமர் தன்பாட்டில் நடந்து கொண்டுள்ளதாகவும், அதனால் அமெரிக்கா பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய முடியாது போகும் என்றும் கூறியுள்ளார்.
.
பிரதமர் தெரேசா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்த எண்ணியிருந்தார். இப்போது பிரதமர் தெரேசாவின் அந்த கனவுகள் குழம்பி உள்ளன.
.
மேலும் தனது கூற்றில் Boris Johnson சிறந்த பிரதமராக இருப்பார் என்றும் ரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். Boris Johnson தெரசா மேக்கு பதிலாக பிரதமர் பதவியில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
.
ரம்ப் வெள்ளிக்கிழமை தெரசா மேயையும், இராணியையும் சந்திப்பார்.

.