பிரித்தானிய புதிய பிரதமர் Boris Johnson

UK

பிரித்தானியாவின் புதிய பிரதமராக Boris Johnson இன்று தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய பிரதமர் Theresay May பதவி விலகுவதால், Conservative கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி போட்டியில் Johnson 92,153 வாக்குகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Jeremy Hunt 46,656 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
.
Johnson புதன்கிழமை தனது பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது.
.
Brexit விவகாரத்தால் குழம்பி உள்ள பிரித்தானியா திடமான ஆட்சி ஒன்றை அமைக்க முடியாது உள்ளது. Brexit விவகாரத்தை கையாள முடியாத நிலையிலேயே May தனது பதவியை துறந்தார்.
.
Johnson தான் Brexit விவகாரத்தை அக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன் தீர்த்து வைக்கவுள்ளதாக கூறியுள்ளார். இவரின் வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி பகிரங்கமாக தனது ஆதரவு தெரிவித்து இருந்தார்.

.