பிரித்தானிய வெளியேற சிறுபான்மை ஆதரவு

UK

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா அல்லது தொடர்ந்தும் அதில் அங்கம் வகிப்பதா என்று அறிய பிரித்தானியரிடம் இன்று நடாத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பு தீர்க்கமான முடிவை வழங்கவில்லை.இறுதியாக கிடைக்கும் எண்ணல்களின்படி, வெளியேற்றத்துக்கு சுமார் 51.5% ஆதரவும், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க 48.5% ஆதரவும் கிடைத்துள்ளது. சுமார் 80% வாக்குகள் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை வெளிவந்த முடிவு பொருளாதார சந்தையில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது.
.
அமெரிக்க டொலரருடன் ஒப்பிடுகையில், பிரித்தானிய நாணயமான பௌண்ட்ஸ் 10% வரையிலான பெறுமதியை இழந்துள்ளது. அதாவது பிரித்தானிய நாணயத்தின் பெறுமதி அது 1985 ஆம் ஆண்டில் இருந்த நிலையை அடைந்துள்ளது. தற்போது 1 U$ = 1.33 பௌண்ட்ஸ் ஆக உள்ளது.
.
ஜப்பானிய பங்கு சந்தை சுமார் 7% தால் வீழ்ந்துள்ளது. சீன மற்றும் Kong Hong பங்கு சந்தைகளும் பெரும் சரிவை எதிர்பார்க்கின்றன.
.
நாளைய தினம் அமெரிக்காவின் DOW சுமார் 650 புள்ளிகளால் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.

இந்த அபிப்பிராய வாக்கெடுப்பு பொருளாதார பாதிப்பை மட்டுமல்லாது, அரசியல் பாதிப்பையும் வழங்கவுள்ளது. குறிப்பாக அயர்லாந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க விரும்பிகிறது. பிரித்தானியாவின் விருப்பத்துக்கும் மாறாக அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பின் அதுவும் பிரித்தானியாவுக்கு குழப்பமாகும்.
.