பிரித்தானிய Conservative கட்சியின் பாதுகாப்பில் Lyca?

Lyca

இலங்கையில் பிறந்தவரான சுபாஷ்கரன் அல்லிராஜா (Subaskaran Alliraja) என்பவரால் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டது Lycamobile என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பெருமளவு பண கடத்தலில் (money laundering) ஈடுபட்டுள்ளது என்ற கூறி பிரான்ஸ் செய்யும் விசாரணைகளுக்கு பிரித்தானியாவின் Conservative அரசாங்கம் இணங்க மறுத்துள்ளது.
.
Lycamobile நிறுவனம் தொடர்பான தகவல்களை BuzzFeed News என்ற செய்தி நிறுவனம் பெருமளவில் பகிரங்கப்படுத்தி வருகின்றது. இந்த செய்தி நிறுவனம் மீது Lycamobile வழக்கும் தொடர்ந்துள்ளது.
.
இந்த செய்தி நிறுவன கூற்றுப்படி Lyca நிறுவனத்தித்திடம் சுமார் 75 மில்லியன் யூரோக்களுக்கு 19 நிறுவனங்கள், 2015 ஆம் ஆண்டின் 9 மாத கால இடைவெளியில், கொள்வனவுகள் செய்துள்ளன. அனால் இவ்வாறு கொள்வனவுகள் செய்த நிறுவனங்களை BuzzFeed தேடியபோது, 18 நிறுவனங்கள் எந்தவித செயல்பாடுகளும் அற்ற தபால் பெட்டி போன்ற முகவரிகளிலேயே காணப்பட்டுள்ளன.
.
அத்துடன் Lyca பணங்களை வங்கியி இடாது, பொதிகளாகவே ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்த்தி உள்ளது. இந்த நடவடிக்கைகளையும் BuzzFeed புகைப்படம் பிடித்துள்ளது.
.
பிரான்ஸ் போலீசார் அந்த நாட்டில் இயங்கிய Lyca அலுவலகங்களை முற்றுகை செய்து 19 பேர்களை கைது செய்துள்ளனர். அதை தொடர்ந்து பிரித்தானியாவிடம் Lyca நிறுவனத்தை கண்காணிக்கவும் கேட்டுள்ளது பிரான்ஸ்.
.
ஆனால் பிரித்தானியாவின் Conservative அரசு அவ்வாறு செய்ய மறுத்துள்ளது. Lyca ஒரு “biggest corporate donor to the Conservative party”, “donated 1.25 million Euros to the Price Charles Trust in 2012” என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த காராணங்களை பகிரங்கப்படுத்தியபோது நாங்கள் என்ன ஒரு மூன்றாம் உலக நாடா என்று கூறி மறுத்துள்ளது பிரித்தானிய அரசு. ஒருதடவை Lyca 870,000 பிரித்தானிய பவுண்ட்ஸ்களை Conservative கட்சிக்கு நன்கொடை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
ஆனால் ஆதாரங்கள் வெளிவந்து நிலைமை உக்கிரம் அடைய, தவறுகளை என்றுகொண்டுள்ளது பிரித்தானிய அரசு. பிரித்தானியாவின் HMRC (Her Majesty’s Revenue and Customs) chancellor Philip Hammond தமது தவறுகளை “huge error of judgment” என்று கூறியுள்ளார்.
.
பிரான்சில் Lyca மீதான விசாரணைகள் இந்த வருட இறுதியில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
.