புரூஸ் லீ யின் 40 ஆம் நினைவு நாள்

Enter the Dragon, The Way of the Dragon, போன்ற படங்களில் நடித்த Bruce Lee மரணம் ஆகி 40 வருடங்கள் நிறைவு அடைந்ததை நினைவூட்ட Hong Kong கில் இன்று ஒரு காட்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. Hong Kong அரசின் உதவியுடன் நடந்த இந்த காட்சியில் Bruce Lee இக்கு சொந்தமாக இருந்த 600 இக்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றன. இங்கு Bruce Lee இனது மகள் Shannon Lee யும் பங்கு கொண்டிருந்தார்.

1940 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் திகதி அமெரிக்க நகரமான San Francisco வில் பிறந்த இவர் 3 மாதமாக இருக்கையிலேயே பெற்றாருடன் Hong Kong திரும்பி இருந்தார். தனது 18 ஆவது வயதில் அவர் மீண்டும் அமெரிக்கா சென்று Seattle இலில் படிப்பை தொடர்ந்தார். University of Washington இல் படிக்கும்போது Linda Emery திருமணம் செய்திருந்தார். இவருக்கு 2 பிள்ளைகள் உண்டு.

Marlowe (1969), The Big Boss (1971), First of Fury (1972), the Way of the Dragon (1972), Enter the Dragon (19730 போன்ற படங்களில் நடித்திருந்த இவர் Game of Death படப்பிடிப்பு காலத்தில், 1973 ஆம் ஆண்டு ஆடி 20 ஆம் திகதி 32 வயதில் மரணமானார்.

Enter the Dragon படப்பிடிப்பு வேளைகளில் ஈடுபட்டிருந்த சமயம் மயங்கி வீழ்ந்த இவரை Hong Kong வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்தியர்கள் Bruce Lee யின் மூளை பகுதியில் cerebral edema இருப்பதை கண்டு பிடித்தனர். ஆனால் Bruce Lee ஐ காப்பாற்ற முடிந்திருக்கவில்லை.