பெண் மிருகங்களும் அதிக காலம் வாழ்கின்றன

XX_XY

உலக நாடுகள் எங்கும் ஆண்கள் வாழும் காலத்திலும் அதிக காலத்துக்கு பெண்கள் வாழ்வது நாம் அறிவோம். ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி ஆண் மிருகங்களில் அதிக காலத்துக்கு பெண் மிருக்கங்கள் வாழ்கின்றனவாம்.
.
மொத்தம் 101 மிருகங்களின் வாழ்க்கை காலங்களை ஆராய்ந்த பிரித்தானியாவின் University of Bath ஆய்வாளர்களே இந்த ஆய்வை Proceedings of the National Academy of Sciences என்ற வெளியீட்டில் விபரித்து உள்ளனர்.
.
சராசரியாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 8% அதிக காலம் வாழ்கின்றனர். ஆனால் ஆண் மிருகங்களுடன் ஒப்பிடுகையில் பெண் மிருகங்கள் 18% அதிக காலங்கள் வாழ்கின்றன.
.
பெண்களும், பெண் மிருகங்களும் அதிக காலம் வாழ என்ன காரணம் என்று திடமாக கூற முடியாது என்றாலும் அவை அவசியம் இன்றி சண்டை ஆபத்தான முயற்சிகளில் இறங்குவது குறைவாக இருப்பது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
.
அத்துடன் பெண் உயிரினம் இரண்டு X chromosome கொண்டிருக்கையில், ஆண் உயிரினம் ஒரு X chromosome மட்டுமே கொண்டுள்ளன (மற்றையது Y chromosome). இந்த X chromosome பாதுகாப்பு செயல்களில் பெண்களுக்கு உடந்தையாக உள்ளன.
.