பேரர் இல்லை, மகன் மீது இந்திய தந்தை வழக்கு

பேரர் இல்லை, மகன் மீது இந்திய தந்தை வழக்கு

தங்களுக்கு பேரப்பிள்ளைகளை பெற்று தரவில்லை என்று மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தந்தை. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்து Haridwar நகரில் வாழும் தந்தையே இவ்வாறு மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தந்தை 50 மில்லியன் இந்திய ரூபாய்களை ($650,000) நட்ட ஈடாக கேட்டுள்ளார்.

Sanjeev Sadhana என்ற ஓய்வு பெற்ற தந்தையும், வயது 62, அவரின் மனைவியும் தமது மகன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன என்றும், மகனும் அவரது மனைவியும் 6 ஆண்டுகளாக பிள்ளை பெறுவதை தவிர்த்து வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். Sagar என்ற மகனும் (வயது 35), Shubhangi என்ற அவரின் மனைவியும் (வயது 31) தாம் செய்யும் தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர் பெற்றார்.

தாம் மகனை பெரும் செலவு செய்து படிப்பித்ததாகவும், அவருக்கு விமானி பயிற்சிக்கு $65,000 பணம் வழங்கியதாகவும், 5-star ஹோட்டலில் மகனின் திருமண நிகழ்வை செய்ததாகவும், அவர்களுக்கு $80,000 பெறுமதியான கார் வழங்கியதாகவும், அவர்களை தாய்லாந்து விடுமுறைக்கு அனுப்பியதாகவும் கூறும் தந்தை அவற்றுக்கான தொகையை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

பேரப்பிள்ளை பிறந்தால் தாம் அந்த பிள்ளையை பராமரிக்கவும் முன்வந்துள்ளனர் தந்தையும் தாயும். தற்போது மகனும், மனைவியும் வேறு நகரில் வாழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மே மாதம் 17ம் திகதி விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.