மசகு எண்ணெய் யுத்தம்

Oil_Well

மசகு எண்ணெய் யுத்தம்

இன்று WTI (West Texas Intermediate) தர மசகு எண்ணெய் விலை பரல் ஒன்று US $39.93 வரை குறைந்து இருந்தது. அதாவது 2009 ஆம் ஆண்டில் இருந்த விலையை இன்று மீண்டும் அடைந்துள்ளது மசகு எண்ணெய். 2008 ஆம் ஆண்டில் பரல் ஒன்று US $145.00 ஆக இருந்திருந்தது. அப்போது பாண்டித்தியர் பரல் ஒன்றின் விலை US $200.00 யையும் தாண்டலாம் என்று கூறியிருந்தனர். கிளி சாஸ்த்திரம் போல் இவர்கள் கருத்து பொய்யாக, அதே பாண்டித்தியர் இப்போது பரல் ஒன்றின் விலை US $20.00 இக்கு கீழேயும் போகலாம் என்கிறார்கள். இவ்வாறு விலை பாரிய வீழ்ச்சி அடைய காரணம் என்ன?
.

1990 ஆண்டு அளவில் இருந்து பரல் ஒன்றின் விலை படிப்படியாக அதிகரித்து வந்திருந்தது. முக்கியமாக சீன, இந்தியா போன்ற சனத்தொகை கூடிய நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்து, பெட்ரோல் பாவனை அதிகரித்ததால் மசகு விலையும் அதிகரித்தது. 2008 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் பரல் ஒன்று US $145.00 வரை விலை போனது. ஆனால் அதே ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் பொருளாதார சரிவு காரணமாக WTI பரல் ஒன்று US $30.82 வரை வீழ்ந்திருந்தது. 2009 ஆண்டில் மீண்டும் WTI பரல் ஒன்று US $80.00 இக்கும் மேலே சென்று, பின் தொடர்ந்தும் அதிகரித்து வந்திருந்தது.
.

இவ்வாறு மசகு எண்ணெய் விலை முன்னுக்கு பின் முரணாக கூடிக்குறைய பாவனை கூடிக்குறைவது மட்டும் காரணமல்ல. உலக அளவில் நடைபெறும் மசகு எண்ணெய் யுத்தமும் ஒரு காரணாமாகும்.
.

மசகு எண்ணெய் தயாரிக்கப்படும் நாடுகளுக்கு ஏற்ப அவற்றின் தரம், உற்பத்தி முறை, உற்பத்தி செலவு எல்லாம் வேறுபாடும்.
.

பிரபலமான இரண்டு மசகு வகைகள் West Texas Intermediate (America) மற்றும் Brent Blend (UK) ஆகும்.
.

மிக இலகுவான மசகு உற்பத்தி முறையை கொண்டுள்ள நாடு சவுதி அரேபியா. அங்கு பரல் ஒன்று US $21.00 க்கு உற்பத்தி செய்யப்படலாம். தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மசகு உற்பத்தி விலை பரல் ஒன்றுக்கு சுமார் US $56.00. அமெரிக்காவில் பரல் ஒன்றின் உற்பத்தி விலை சுமார் US $60.00. கனடாவின் tar sand மசகு பரல் ஒன்றின் உற்பத்தி விலை சுமார் US $82.00.
.
சவுதியில் மசகு எண்ணெயை திரவ நிலையிலேயே கிணறுகளில் இருந்து எடுத்து சுத்திகரிப்பர். இதை எடுப்பதற்கான செலவு மிகவும் குறைவு. ஆனால் கனடாவின் tar sand மசகு திண்ம நிலையில் களிமண், நீர், இதர கனியங்களுடன் கலந்து உள்ளது. அதையே tar sand என்பர். முதலில் களிமண், நீர் போறவற்றை tar sand இல் இருந்து நீக்கி மசகை பிரிக்க வேண்டும். அவ்வாறு செய்வது பரல் ஒன்றுக்கான மொத்த செலவை அதிகரிக்கும். சவுதிக்கு இந்த செலவு இல்லை. அத்துடன் கனடாவில் தொழிலாளர் ஊதியம் அதிகம். அமெரிக்காவில் பெருமளவில் shale எனப்படும் மசகு shale கற்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு மசகு தாரிக்கும் முறைகள் வேறுபட, உற்பத்தி செலவும் வேறுபாடும்.உற்பத்தி விலை அடிபடையில் சவுதி அரேபியாவின் கையே ஓங்கியுள்ளது.

.
TarSand
.
எண்ணெய் வருமானத்தை மட்டும் தேசிய வருமானமாக கொண்டுள்ள சவுதி தனது சந்தையை அமெரிக்கா, கனடா, போன்ற புதிய வரவாளர் தட்டிப்பறிப்பதை விரும்பவில்லை. புதிய வரவாளர் மட்டுமல்ல, electric car போன்ற புதிய தொழில் நுட்பங்களும் சவுதி போன்ற நாடுகளின் எதிர்கால வருமானத்தை மிரட்டி வருகின்றன. அதிகளவு Shale மசகு தயாரிப்பு காரணமாக இந்த வருடம் அமெரிக்காவே உலகின் அதிகூடிய மசகு தயாரிப்பாளர் ஆகலாம் என கூறப்படுகிறது. தற்போது அமெரிக்கா நாள் ஒன்றுக்கு 9.4 மில்லியன் பரல் மசகை தயாரிக்கிறது. 2008 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் மட்டும் அமெரிக்காவின் மசகு உற்பத்தி 75% ஆல் அதிகரித்துள்ளது. இந்நிலை தொடரின் சவுதி விரைவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படலாம். தற்போது சவூதி சுமார் 10 மில்லியன் பரல்களை நாள் ஒன்றுக்கு தயாரிக்கிறது.
.
Oil_Demand
.

பரல் ஒன்றின் விலை அதிகமாக இருந்ததாலேயே புதிய தயாரிப்பாளர் உருவாகினர் என்பதை அறிந்த சவுதி தற்போது தேவைக்கு மிதமாக மசகை உற்பத்தி செய்கிறது. அதனால் விலை பெரு வீழ்ச்சி அடைய, அது பல புதிய வரவாளர்களின் உற்பத்தி விலையையும் விட குறைவாக, புதிய மசகு உற்பத்தியாளர் வேறு வழி இன்றி உற்பத்தியை நிறுத்துவர். இது சவுதியின் கணிப்பு. அது ஓரளவு உண்மையும் கூட. கடந்த October மாதத்தில் அமெரிக்காவில் 1596 oil rigs இருந்தன, ஆனால் இந்த வருடம் April மாதத்தில் 750 மட்டுமே இயங்கின.

.
அதேவேளை குறைந்த மசகு விலையால் ரஷ்யா பெரும் பண இழப்பு அடைவதையும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் விரும்பின. பக்க விளைவாக கனடா போன்ற நாடுகளும் பெரும் பண இழப்புக்கு ஆளாகின்றன. இதனால் கனேடியன் டொலர் பெறுமதி அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில் சுமார் 30% ஆல் வீழ்ந்துள்ளது.
.
சவுதி மசகு விலையை மிக குறைவாக வைத்திருக்கையில் தானும் பெரும் நட்டம் அடைகிறது. மலிவு விலையால் சவுதியின் ஒரேயொரு வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால் எவரும் உற்பத்தியை குறைப்பதாய் இல்லை.
.

இதுவரைகாலமும் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஈரான் மசகு உட்படுத்தும் விரைவில் நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் பரல் ஆக இருக்கும்.

.