மண்டேலாவை காட்டிக்கொடுத்தது CIA

Mandela

CIAயின் தகவலின் அடிப்படையிலேயே தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தியை முன்னாள் CIA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Donald Rickard என்ற அமெரிக்கர் ஒரு CIA உளவாளி. ஆனால் அவர் தென் ஆபிரிக்காவுக்கான அமெரிக்காவின் உதவி கவுன்சிலர் ஆக Durban நகரில் கடமை புரிந்திருந்தார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மண்டேலா கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.
.
அப்போது CIA மண்டேலாவை ஒரு முழுமையான USSR முகவர் என்று கருதி இருந்ததாம். மண்டேலா தென் ஆபிரிக்காவில் பெரும் யுத்தத்தை உருவாக்கலாம் என்று CIA கருதியதாம். அதனாலேயே அவரை கைது செய்ய உதவியது என்றுள்ளார் Rickard.
.
மண்டேலா உருவாக்கிய கட்சியான ANCயின் பேச்சாளரான Zizi Kodwa இவ்விடயம்பற்றி கருத்து கூறுகையில், அன்று மட்டுமல்ல இன்றும் CIA தென் ஆபிரிக்காவின் அரசியலில் தலையிடுகிறது என்றுள்ளார்.
.

1990 இல் விடுதலை செய்யப்பட்ட மண்டேலா 1994 முதல் 1999 வரை தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருந்தார். 2013 இல் இவர் காலமாகியிருந்தார்.
.