மருவானா நோ நிவாரணம் பொய் என்கிறது ஆய்வு

மருவானா நோ நிவாரணம் பொய் என்கிறது ஆய்வு

மருவானா (marijuana) என்ற இடைநிலை போதை உடல் நோக்களை (pain) தணிக்கக்கூடிய ஒரு நிவாரணி என்று அதை பயன்படுத்துவோர் கூறுவது பெருமளவில் பொய் என்று கூறுகிறது ஆய்வு ஒன்று. இவ்வாறு மக்கள் பொய்யான மருத்துவம் ஒன்று தமக்கு  நிவாரணம் வழங்குகிறது என்று நம்புவதை பிளஸீபோ (placebo effect) என்பர்.

சுவீடன் நாட்டில் உள்ள Karolinska Institute என்ற நரம்பியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வே இவ்வாறு கூறியுள்ளது.

ஆய்வுக்கு உட்பட்ட நோயாளிகளில் சிலருக்கு உண்மையான மருவானா குளிசைகளையும், ஏனையோருக்கு மருவானா அற்ற பொய் (dummy pill) குளிசைகளையும் வழங்கி இருந்தனர். பொய்யான குளிசை பெற்ற நோயாளிகளில் 67% பேர் தமது நோ தணிந்து உள்ளதாக கூறியுள்ளனர். அவ்வாறு அவர்கள் கொண்ட பொய்யான உணர்வை பிளஸீபோ effect என்பர்.

இந்த ஆய்வின் அறிவுகளை நவம்பர் மாதம் 28ம் திகதி வெளியான Journal of the American Medical Association (JAMA) பிரசுரிப்பு தெரிவித்து உள்ளது.

2021ம் ஆண்டு வெளிவந்திருந்த ஆய்வு ஒன்றும் இவ்வகை அறிவுகளையே வெளியிட்டு இருந்தது. இந்த ஆய்வை International Association for the Study of Pain என்ற அமைப்பு செய்திருந்தது. இந்த அமைப்பு மருவானாவை நோ தணிப்பு மருந்தாக பாவனை செய்வதை தவிர்க்க கேட்டிருந்தது.

2020ம் ஆண்டு University of Colorado Hospital செய்த ஆய்வும் மருவானா பயன்பாட்டை நிராகரித்து இருந்தது. மருவானா உட்கொள்வோருக்கு அறுவை சிகிச்சை நேரத்தில் அதிக அளவு anesthesia தேவைப்படுகிறது என்றும் அது நல்லதல்ல என்றும் இந்த ஆய்வு கூறியிருந்தது.

2020ம் ஆண்டு பிரித்தானியாவும், ஐரோப்பாவும் இணைந்து 1,500 புற்றுநோய் நோயாளிகள் மீது செய்த ஆய்வு ஒன்றும் மருவானா நோ தணிப்பை செய்யவில்லை என்று கூறியிருந்தது.

ஆனாலும் பெருமளவு இளம் வாக்காளர் மருவானா பாவனையை விரும்ப, மேற்குலகின் சனநாயக அரசியல்வாதிகள் அந்த வாக்குகளை இலகுவில் பெறும் நோக்கில் போதைக்கு ‘medical’ என்ற மகுடம் வைத்து மருவானா பாவனையை சட்டம் ஆக்கியுள்ளனர். அதையே பின் சொந்த அறிவற்ற மூன்றாம் உலக நாடுகளின் அரசியல்வாதிகள் copy அடிக்கின்றனர்.