மலை உடைந்ததாலேயே அணு பரிசோதனை இடைநிறுத்தம்?

NorthKoreaTest

அண்மை காலம் வரை பெருமளவு அணு குண்டு பரிசோதனைகளை செய்துவந்த வடகொரிய தலைவர் திடீரென அவ்வகை அணு பரிசோதனைகளை தாம் நிறுத்துவதாக கூறியிருந்தார். இந்த தீர்மானத்தை வடகொரியா சுயமாகவே எடுத்திருந்தது. உலகம் வடகொரியாவின் இந்த மன மாற்றைத்தை அறிந்து வியந்தும் இருந்தது.
.
ஆனால் தற்போது சீனாவில் இருந்து வெளிவரும் சில அறிக்கைகள் வடகொரியா அணு குண்டு பரிசோதனைகளை செய்யும் மலை பகுதி அண்மையில் வெடிக்கப்பட்ட மிக பெரிய குண்டுகளின் தாக்கம் காரணமாக உடைந்து வீழ்ந்துள்ளது என்கின்றன.
.
University of Science and Technology of China தனது அறிக்கையில் வடகொரியாவின் அணு குண்டு பரிசோதனை பகுதியான Punggye-ri மலை பகுதி பெருமளவில் உடைந்து வீழ்ந்துள்ளதாக கூறியுள்ளது.
.
இந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வெடிக்கப்பட்ட அணு குண்டு 6.3 அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மேற்கு நாடுகளின் கணிப்பின்படி இங்கு வெடிக்கப்பட்ட குண்டு ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்ட குண்டின் 17 மடங்கு வலுவை கொண்டிருந்ததாம்.
.

இங்கு கூறப்பட்ட மலை உடைவு உண்மை எனின், இந்த அணு பரிசோதனை நிலையம் பாவனைக்கு உதவாத நிலையை அடைந்திருக்கலாம்.
.
இப்பகுதி சீனாவின் எல்லையில் இருந்து சுமார் 80 km தூரத்தில் உள்ளதால் சீனா அணு கதிர் வீச்சுகள் எதுவும் கசிகிறதா என்று கண்காணித்து வருகிறது.
.