மாணவர் வீச முனைந்த உணவை உண்ட சீன அதிபர்

மாணவர் வீச முனைந்த உணவை உண்ட சீன அதிபர்

தனது பாடசாலை மாணவர்கள் விரையமாக வீச முனைந்த உணவை 58 வயதான Wang YongXin என்ற அப்பாடசாலை அதிபர் பெற்று தான் புசித்துள்ளார். மாணவர்கள் உணவை விரையமாக்குவதை நிறுத்தும்படி அவர்களுக்கு அறிவூட்டும் நோக்கிலேயே அதிபர் இவ்வாறு செய்துள்ளார்.

HuNan மாநிலத்தில் உள்ள QiYang நகர் பாடசாலை அதிபர் சில மாணவர் வீச முனைந்த உணவை உண்டதை கண்ட ஏனைய மாணவர் தாம் வீச இருந்த உணவை உடனே உண்டு முடித்தனர் என்று கூறப்படுகிறது. அத்துடன் தற்போது அளவுக்கு அதிகமாக உணவை கொள்வனவு செய்வதையும் குறைத்து உள்ளனர்.

அதிபர் மாணவர்களுக்கு அறிவூட்டும் நோக்கில் இதை செய்தாலும் இச்செயல் சுகாதாரத்துக்கு முரண் அல்லவா என்று கூறியபோது மாணவர்கள் எல்லாரும் தனது பிள்ளைகள் என்றும், அவர்களின் உணவை உண்பதில் தனக்கு வெறுப்பு இல்லை என்றும் அதிபர் கூறியுள்ளார்.

உணவு விரயமாவதை தடுக்க சீன அரசு பல சட்டங்களை உருவாகியுள்ளது. உணவகங்கள் அதிக உணவை விரையமாக வீசினால் தற்போது தண்டம் அறவிடப்படும். பதிலுக்கு வாடிக்கையாளர் அதிக உணவை மிச்சமாக விட்டால் அவர்களுக்கு உணவகம் தண்டம் விதிக்கும்.

சீன உணவகங்களில் சுமார் 11.7% உணவு விரையம் செய்யப்படுகிறது. அதேவேளை பாடசாலை மாணவர் சுமார் 33% உணவை விரையம் செய்கின்றனர் என்றும், பெரிய நிகழ்வுகளில் சுமார் 38% உணவு விரையம் செய்யப்படுகிறது என்றும் Chinese Academy of Science என்ற அமைப்பு 2018ம் ஆண்டு செய்த ஆய்வு ஒன்று அறிந்துள்ளது.