மீண்டும் அமெரிக்கா-கியூபா உறவு

Cuba-Am

1961 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா-கியூபா உறவை மீண்டும் புதிப்பிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பணித்துள்ளார். இதன் முதல் கட்டமாக கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதுவர் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அமெரிக்கர்கள் கியூபா செல்லவும் இலகுவாக அனுமதிக்கப்படும். கடந்த 18 மாதங்களாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளது.
.
இந்த புது உறவின் ஒரு அங்கமாக அமெரிக்கா தன்னிடம் கைதிகளாக இருந்த 3 கியூபா நாட்டவர்களை விடுதலை செய்யவுள்ளது. கியூபாவும் Alan Gross என்ற அமெரிக்கர் உட்பட 2 அமெரிக்கர்களை விடுதலை செய்யவுள்ளது.
.
Pope Francis இன் பங்களிப்பும் இந்த விடயத்தில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.
.
1962 இல் சோவியத்யூனியனின் nuclear ஏவுகணைகளை கியூபாவில் நிலை கொள்ள முனைந்ததால் ஏற்பட்ட 13 நாள் சோவியத்-அமெரிக்க முறுகல் நிலை பெரும் மோதலையே ஏற்படுத்த இருந்தது. பின்னர் பிடெல் காஸ்ரோவை கொல்ல பல முயற்சிகளும் மேற்கோள்ளப்பட்டன. அதை எல்லாம் தாண்டி இன்று மீண்டும் நட்புறவு நிலை தோன்றியுள்ளது.
.
தனது உரையில் “These 50 years have shown that isolation has not worked,” என்று ஒபாமா கூறியுள்ளார்.