மீண்டும் குமுறுகிறது இந்தோனேசியா எரிமலை

Agung

இந்தோனேசியாவின் பாலி (Bali) தீவில் உள்ள Agung எரிமலை கடந்த சில நாட்களாக குமுற ஆரம்பித்துள்ளது. நாளுக்குநாள் இதன் குமுறல் உக்கிரம் அடைந்தும் வருகிறது. தற்போது 100,000 வரையான பொதுமக்கள் எரிமலை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். Agung மலையில் இருந்து 10 km தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களே தற்போது நகர்த்தப்பட்டு உள்ளனர்.
.
பாலி தீவு இந்தோனேசியாவில் உள்ள உல்லாச பயணிகளுக்கான முதன்மை இடம். இந்தோனேசியா செல்லும் உல்லாச பயணிகளில் 40% பயணிகள் பாலி தீவுக்கே செல்வார். ஆனால் இந்த எரிமலை குமுறல் காரணமாக அப்பகுதியில் உள்ள விமான நிலையத்துக்காக 450 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. Denpasar என்ற நகரில் உள்ள இந்த விமான நிலையம் திங்கள் கிழமை மூடப்பட்டு உள்ளது.
.
இந்த எரிமலையின் சாம்பலுடன்கூடிய புகை சுமார் 6 km உயரம்வரை செல்கிறது. இந்த எரிமலை துகள்கள் நிறைந்த புகை வானத்தில் பறக்கும் விமானங்களும் ஆபத்தானது என்றபடியால், பாலி தீவை அண்டிய வானத்தில் விமானங்கள் பறப்பதுவும் விலக்கப்படுள்ளது.
.

1963 ஆம் ஆண்டு இடம்பெற்ற Agung எரிமலையின் வெடிப்புக்கு சுமார் 1,700 பேர் பலியாகி இருந்தனர். இதோனேசியாவில் சுமார் 120 எரிமலைகள் உள்ளன.
.