மீண்டும் வலுபெறும் ரஷ்யா, யுக்கிரேன் முறுகல்

SeaOfAzov

ரஷ்யாவுக்கும், யுக்கிரேனுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை வலுவடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனுக்கு சொந்தமான 3 கப்பல்களை ரஷ்யா தடுத்து வைத்தமை காரணமாகவே முறுகல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. தமது நீர்பரப்புள் அந்த கப்பல்கள் நுழைந்ததாலேயே தாம் அவற்றை கைப்பாற்றியதாக ரஷ்யா கூறியுள்ளது.
.
ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனின் 3 கப்பல்களும் கருங்கக்கடல் (Black Sea) துறையான Odesa வில் இருந்து Azov கடலில் (Sea of Azov) உள்ள துறையான Mariupol நோக்கி செல்கையிலேயே இந்த முரண்பாடு உருவாகியது.
.
2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கிரேமியா என்ற பகுதியை தனதாக்கிய பின்னர் , கருங்கடலில் இருந்து Azov கடல் செல்ல உள்ள ஒரே பாதையான Kerch நீரிணை தற்போது ரஷ்யாவின் முழுமையான கட்டுப்பாடில் உள்ளது. ரஷ்யா தற்போது அந்த நீரிணையின் குறுக்கே ஒன்று பெரிய கப்பலையும் நிறுத்தி உள்ளது.
.
Azov கடலின் ஒரு பகுதி யுக்கிரேனுக்கு உரியது என்றாலும், அங்கு போகும் வழி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
.
KerchStrait
.
இந்த விவகாரத்தை விவாதிக்க ஐ. நா. அவசரகால கூட்டம் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் யுக்கிரேயினுக்கு தமது ஆதரவை வழங்கி உள்ளன.
.