முதல் 1% செல்வந்தரிடம் 99% விட அதிக செல்வம்

Oxfam

உலகின் முதல் 1% செல்வந்தரிடம் ஏனைய 99% மக்களைவிட அதிகம் செல்வம் இருப்பதாக Oxfam தனது அறிக்கையில் கூறியுள்ளது. அத்துடன் இந்த் இந்த அறிக்கையின்படி உலகின் முதல் 62 செல்வந்தர் கொண்டிருக்கும் மொத்த செல்வம், உலகின் ஏழைகளான 50% சனத்தொகையினர் கொண்டிருக்கும் செல்வத்தை விட அதிகமானது. Oxfam அறிக்கை Credit Suisse தரவுகளை அடிப்படையாக கொண்டது.
.
முதல் செல்வந்த 62 பேர்களில் 30 பேர் வரையானோர் அமெரிக்கர், 17 பேர் ஐரோப்பியர். மிகுதியானோர் சீன, பிரேசில், சவுதி, மெச்சிக்கோ மற்றும் ஜப்பான் ஆகிய நாட்டு பிரசைகள் ஆவர்.
.
உலகில் ஒருவர் $68,800 பெறுமதியான செல்வத்தை வைத்திருப்பின் அவர் முதல் 10% செல்வந்தருள் அடங்குவர். ஒருவர் $760,000 பெறுமதியான சொத்துக்கள் வைத்திருப்பின் அவர் முதல் 1% செல்வந்தருள் அடங்குவர்.
.
சுமார் 30% ஆபிரிக்கர்களின் செல்வம் வெளிநாடுகளில் வைக்கப்படுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
.

தரவு: Oxfam