முன்னாள் புலிக்கு ஜெர்மனியில் சிறை தண்டனை

LTTE

புலிகளுக்கு முன்னாளில் உளவுபார்த்த நவநீதன் (Navanithan G., வயது 39) என்பவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் 10 மாதகால சிறைத்தண்டனை தீர்ப்பை இன்று திங்கள்கிழமை வழங்கி உள்ளது.
.
2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் புலிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு நவநீதன் உடந்தையாக இருந்துள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வெளிநாட்டு பயங்கவாத குழுவில் உறுப்பினராக இருந்தமையை இவரின் குற்றமாகும்.
.
2012 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அகதி நிலைக்கு விண்ணப்பித்த காலத்தில் தான் வழங்கிய தகவல் மூலமே கதிர்காமர் கொலை செய்யப்பட்டார் என்று நவநீதன் கூறியுள்ளார். அனால் பின்னர் தனது கூற்று தவறாக மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது என்று கூறி தனது முன்னைய கூற்றை அவர் மறுத்தும் உள்ளார்.
.
இவர் கடந்த புதன்கிழமை ஜெர்மனியின் தென்கிழக்கு பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருந்தார். இவரின் வதிவிடமும் பொலிஸாரால் தேடுதல் செய்யப்பட்டது.
.
நவநீதன் மீதான தீர்ப்பை மறுத்து அப்பீல் செய்ய அவருக்கு உரிமை உண்டு.
.