மும்பாய் புகையிரத நிலைய நெரிசலுக்கு 22 பேர் பலி

Mumbai

வெள்ளிக்கிழமை காலை மும்பாய் புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு 22 பேர் பலியாகியும், மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நெரிசல் இரண்டு நிலையங்களுக்கு இடையில் உள்ள நடை பாலம் ஒன்றில் இடம்பெற்று உள்ளது.
.
பிரபாதேவி நிலையத்துக்கும் (Prabhadevi station) பரோல் (Parel station) நிலையத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிய பாலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
.
நெரிசலுக்கான காரணம் இதுவரை திடமாக அறியப்படவில்லை. அனால் ஒரு சீமெந்து துண்டு உடைந்து வாழ்ந்ததாகவும், அப்போது பாலம் உடைகிறது என்று கருதி மக்கள் தப்பி ஓட முனைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. அத்துடன் அவ்விடத்தில் மின்சாரம் தடைபட்டு இருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
.

இந்த அனர்த்தத்தின் போது இப்பகுதில் கனத்த மழை பொழிந்துள்ளது. மாலையில் இருந்து ஒதுங்க பலரும் இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த இந்த நிலையங்களில் பல பகுதிகள் 1860-1870 ஆண்டு காலப்பகுதில் நிர்மாணிக்கப்பட்டவை.
.