மெக்ஸிக்கோவை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியது

Ring_of_Fire

உள்ளூர் நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:29 மணியளவில் மெக்ஸிகோவின் Oaxaca என்ற தென் மாநிலத்தில் 7.4 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கம் இதுவரை 2.3 உயர அலைகளை தோற்றுவித்து உள்ளது. சுமார் 1,000 km சுற்றாடலுக்கு சுனாமி எச்சரிக்கை தற்போது நடைமுறையில் உள்ளது.
.
இந்த நிலநடுக்கம் அண்மையில் உள்ள Guatemala, Hounduras, El Salvador ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டு உள்ளது. சுமார் 300 km வடக்கே உள்ள Mexico City என்ற மெக்ஸிகோவின் மிகபெரிய நகரிலும் நடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
.
பசுபிக் கடலோரம் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் மையம் நிலத்துக்கு கீழ் சுமார் 26 km ஆழத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
.
Oaxaca பகுதியில் பல உரமற்ற கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. ஆனால் மேலதிக இழப்புகளின் விபரம் இதுவரை அறியப்படவில்லை.
.
நிலநடுக்கம் இடம்பெற்ற பகுதி Ring of Fire என்று அழைக்கப்படும் பசுபிக் சமுத்திரத்தை சுற்றிய புவி ஓடுகள் மோதும் இடமாகும்.
.